2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்குளி சம்பவ அடையாள அணிவகுப்பு: பொலிஸாரின் நடவடிக்கைக்கு சட்டத்தரணி எதிர்ப்பு

Super User   / 2010 ஜூலை 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டி. பாருக் தாஜூதீன்)

மட்டக்குளி பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கான அடையாள அணிவகுப்புகளின்போது பொலிஸார் வழக்கத்தை மீறி, தாம் அழைத்துவந்த நபர்களையும் அதில் பங்குபற்றச் செய்ததாக  சந்தேக நபர்களின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

வழக்கமாக நீதிமன்றத்திற்கு வந்திருப்பவர்களிலிருந்து சிலரை தெரிவு செய்தே அடையாள அணிவகுப்பில் பற்றச்செய்யப்படும் எனவும் மாறாக பொலிஸார் அழைத்து வரும் நபர்களை ஈடுபடுத்துவதில்லை எனவும் சட்டத்தரணி அன்டன் சேனநாயக்க கூறினார்.

ஆனால், மட்டக்குளி சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்ற அடையாள அணி வகுப்புகளின்போது பொலிஸார் தாமே அழைத்து வந்த நபர்களை பங்குபற்றச் செய்துள்ளனர். இந்த அடையாள அணி வகுப்பு மட்டக்குளி பொலிஸ் நிலையத்தை தாக்கியவர்களை இனங்காண்பதற்கானது என்றநிலையில் பொலிஸார் இவ்வாறு நடந்துகொள்வது அபத்தமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தான் நீதவானிடம் புகாரிட்டதாகவும் அதையடுத்து பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட சுமார் 20 பேர் அடையாள அணிவகுப்பில் பங்குபற்றவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சட்டத்தரணி சேனநாயக்க மேலும் கூறினார்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--