2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

மட்டு. சினிமா திரையரங்கு தீக்கிரை;சந்தேக நபருக்கு நீதிமன்று விளக்கமறியல் உத்தரவு

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நகரிலுள்ள சினிமாத் திரையரங்கமொன்றிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமக்கமலன் உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே, இதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்த வேட்பாளரான எம்.மோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியிலுள்ள சாந்தி திரையரங்கம் கடந்த வெள்ளிக்கிழமை தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--