2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 08 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 16,398 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இந்நிதி மூலம் 1,775 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இத்திட்டங்களில் இதுவரையில் 6700 மில்லியன் செலவில் 836 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் ஏனைய பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் எனவும் இரா.நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.

கமநகும, மகநகும, மத்திய மாகாண அமைச்சுக்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிதியுதவிகளினூடாக இவ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--