2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கமெதில்ல தேசிய பூங்காவுக்கு அருகிலுள்ள அபன்கங்கையில், சட்டவிரோதமானமுறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள், சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்,  வன ஜீவராசிகள் திணைக்களத்தில் பணியாற்றும் காவலாளர்கள் இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன ஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்  போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .