Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸர்பைஜானில் மாடி வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்த 3 மாணவிகளின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான செலவுகளுக்காக 15 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அஸர்பைஜான் மேற்கிலுள்ள கெஸ்பியன் பல்கழைக்கழகத்தில் (Caspian University) கல்வி பயின்ற 21, 23 மற்றும் 25 வயதான 3 மாணவிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் பாடநெறியொன்றை கற்பதற்காக 3 மாணவிகளும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் அங்கு சென்றிருந்தனர்.
மாணவிகள் தங்கிருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயினால் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடுவளை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளே இந்தத் தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவிகளின் பெற்றோர், வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது, நிதியுதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago