2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

“ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்”

Janu   / 2026 மே 19 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (19) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

 “2024ஆம் ஆண்டில் 711 மாணவர்களும், 2025ஆம் ஆண்டில் 885 மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் இடைவிலகல் தொடர்பான காரணங்களை ஆராய்ந்து, அவர்களை மீண்டும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான (மீள்சேர்க்கை) நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X