Yuganthini / 2017 ஜூன் 08 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
“இலங்கையில் இலவசக் கல்வியின் மேம்பாட்டுக்காகப் பல திட்டங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் அதிகரிப்பது கவலையளிக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது” என, திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்துள்ளார்.
நன்னடைத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் அம்பாறை - திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வறிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று (07) மாலை இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"இலங்கையின் கல்வி அறிவின் வளர்ச்சியை நோக்கின்றபோது, தெற்காசியாவில் முன்னிலையில் இருக்கின்றது. இது இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் கிடைத்த பெருமையாகும். இலங்கையில் அமரர் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கராவால் கொண்டுவரப்பட்ட இலவசகக் கல்வித் திட்டம், ஒரு தூர நோக்கான திட்டம். இத்திட்டத்தின் காரணமாகத்தான், இலங்கையின் கல்வி மட்டம் உயர்வாக இருப்பதற்கு காரணமாக அமைந்தது.
அந்தவகையில், இலங்கையில் உள்ளவர்கள் அனைவரும் இலவசக் கல்வியால் உருவாக்கப்பட்டவர்கள்தான். இதையடுத்து, 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன, இலவச பாடப் புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இலவச பாடசாலை சீருடை, உணவு போன்ற திட்டங்கள் மற்றும் கல்விக்கு 6 சதவீதத்துக்கும் அதிகமான நிதிகள் ஒதுக்கப்படுகின்றமை போன்றன, இலங்கையரின் கூடுதலான கல்வி அறிவுக்குக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.
இவ்வாறு மாணவர்களின் கல்வி வளர்ச்சிகாக 6சதவீதத்துக்கும் மேலாக நிதிகள் ஒதுக்கப்படுகின்ற போதிலும், மாணவர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு, வறுமை ஒரு காரணமாக முன்வைக்கப்படுகின்றது.
இது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். மாணவர்களின் கல்வியில்தான் அவர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, பெற்றோர், தங்களின் குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்ட வேண்டும்” என்றார்.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025