2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மாணவர் நாடாளுமன்றில் தமிழர்களுக்கு இரு பிரதியமைச்சுக்கள் - எஸ்.பி கவலை

Super User   / 2010 ஜூலை 04 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர் நாடாளுமன்றத்தில் மொத்தமாக 20 அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், அவற்றுள்  தமிழ் மொழிமூல மாணவர்களுக்கென இரு பிரதியமைச்சுப் பதவிகள் மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றதென்று  உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க  தெரிவித்தார்.

வரலாற்று ரீதியாக சிறுபான்மையின மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளால் இந்நாடு பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டது. அவ்வாறான நிகழ்வுகள் இனியொருபோதும் இடம்பெறாதவாறு செயற்படுவது கட்டாயமாகுமென்றும் அமைச்சர் கூறினார்.

நாடு பூராகவும்  மாணவர் நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனொரு அங்கமாக, கண்டி விகாரமகாதேவி மகளிர் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்ற அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

1936ஆம் ஆண்டு டொனமூர் அரச கழகத்தின் அமைச்சரவை, தனி சிங்கள அமைச்சரவையாக அமைந்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேபோன்று, 1956ஆம் ஆண்டு சிங்கள மொழி, தேசிய மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவுகளையும் நாம் மறந்துவிட முடியாது. எனவே பாடசாலைகள் மட்டத்தில் அமைக்கப்படுகின்ற இவ்வாறான நாடாளுமன்றங்கள் அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டுமென்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேற்படி மாணவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான இரு தமிழ் மொழிமூல மாணவர்களும் தமிழ் மொழியிலேயே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.  Comments - 0

 • koneswaransaro Monday, 05 July 2010 03:27 AM

  எஸ்.பி.யின் கவலை எல்லாம் அரசியல் சார்ந்ததே தவிரத் தமிழ் மக்கள் சார்ந்ததாக யாரும் நம்பவேண்டாம்.

  Reply : 0       0

  Zaman Monday, 05 July 2010 04:27 AM

  கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ......

  இரு சகோதரர்களுக்கும் எமது பாராட்டுக்கள் !!!

  தமிழ் மொழி எங்கள் மொழி

  Reply : 0       0

  Siva Monday, 05 July 2010 12:53 PM

  மினிஸ்டர் கதைத்தது மிகவும் சரியானது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--