Editorial / 2017 ஜூன் 07 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சரிந்து விழுந்த மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில், பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கை, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, இந்த அறிக்கையை தயாரிப்பதற்காக, 14 பேர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில், 42 பக்கங்களைக் கொண்டதாக, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை நடத்திய குழுவின் ஒருங்கிணைப்பாளர் டொக்டர் ஜயலத் திஸாநாயக்க தலைமையின் கீழ், பேராதனைப் பல்கலைக்கழக பதில் வேந்தர் கலாநிதி உபுல் பீ. திஸாநாயகத்தினால், முதல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பின்னர், பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு உதவியாளர் பொலிஸ் அதிகாரி மனோஜ் பெரேராவுக்கு, உபவேந்தரால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை, பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு, எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
5 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
5 hours ago
07 Jan 2026