Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்துகம தொடக்கம் கொழும்பு வரை சேவையில் ஈடுபடும் சகல தனியார் சொகுசு பஸ் சாரதிகளும் இன்று (19) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை, பாடசலை மாணவர் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்க முற்பட்ட போது, அவர் கீழே விழுந்து காயமடைந்த சம்பவத்தையடுத்து, குறித்த பிரதேச மக்கள் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த சாரதி மற்றும் நடத்துநர் அகலவத்தை –பிபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், குறித்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்தியோரை கைது செய்யுமாறும் வலியுறுத்தியே, இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago