Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 ஜூன் 07 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
“2003ஆம் ஆண்டும் அதற்கு முன்னரும் ஏற்பட்ட வெள்ளங்களுக்கு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைதான் காரணமா?” என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
நாமல் எம்.பிக்குச் சொந்தமான கவர் கோப்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்று, 30 மில்லியன் ரூபாய் பணச்சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு, நாமல் எம்.பி, நேற்று (06) வருகைதந்திருந்தார்.
அதன்பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து,”அதிவேக நெடுஞ்சாலையால் தான் வெள்ளம் ஏற்படுவதாகக் குற்றம் சுமத்தப்படுகிறதே?” என, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், “இரத்தினபுரியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கும் அதிவேக நெடுஞ்சாலைதான் காரணமா?” எனவும் கேள்வியெழுப்பினார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago