2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'மயிலைக் கொலை செய்யவில்லை': மனைவி வாக்குமூலம்

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோமான முறையில் மயிலொன்றை வேட்டையாடி நபர் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட சந்தேகநபரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்துள்ளார். 

'சம்பவம் நடந்த தினத்தன்று, திருமண வீடொன்றுக்குச் சென்றுவிட்டு வரும் போது தனது கணவர் பயணித்த வான் முன்னால் மயிலொன்று மோதுண்டு இறந்துவிட்டது. பின்னர் மயிலை, அவர் தங்கியிருந்த கூடாரத்தில் வைத்து எடுத்த புகைப்படத்தை யாரோ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்' என மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்துள்ளார். 

மேலும், தற்போது இத்தாலியில் இருக்கும் தனது கணவர் எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கைக்கு வருவார் எனவும் அவர் வந்தவுடன் பொலிஸ் நிலைத்துக்கு அழைத்துவருவதாகவுமம் அவர் கூறியுள்ளார். 

இச்சம்பமானது கடந்த 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்றது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .