2021 மே 08, சனிக்கிழமை

மரக்கறிகளின் விலைகள் உயர்ந்தன

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரஞ்சித் ராஜபக்ஷ

 மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழைகாரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. 150 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ கிராம் கறிமிளகாய் 1,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம், 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான உள்ளூர் மரக்கறிகள் ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது.

தம்புள்ள மற்;றும் நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலையும் கிலோ கிராம் ஒன்றிற்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அதிகரித்துள்ளன.

இம்மாவட்டத்தில் உள்ளூர் மரக்கறி உற்பத்தி செய்யப்படும் இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெருமளவு மரக்கறித் தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. இதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்;கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடைக் காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகிப் போவதற்கான ஆபத்து உள்ளதாக இப்பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் இவ்வாறான காலநிலையால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

அந்தவகையில், ஒரு கிலோகிராம் மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு:


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X