2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மலசலகூட குழியிலிருந்து சிசு உயிருடன் மீட்பு;எஹெலியகொட பகுதியில் சம்பவம்

Super User   / 2010 மே 24 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலசலகூட குழியொன்றிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்றை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று எஹெலியகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிசுவினை மீட்டுள்ள தம்பதியர், அதனை எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அந்த சிசு அவிசாவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மேற்படி சிசுவினை பிரசவித்த பெண்ணைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.  

  Comments - 0

 • nuah Monday, 24 May 2010 09:33 PM

  ஒன்றும் அறியாத பச்சிளம் பாலகன். இம்மாதிரியான செயல்களை தடுக்குமுகமாக தாயை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். விதி என்று விட்டுவிடக் கூடாது.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 26 May 2010 09:22 PM

  இளம்பிராயத்தினர் செய்யும் தவறுகள் அவர்களது வாழ்க்கையையே பாதித்துவிடுமாதலால் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஏதாவது செய்யவும் வேண்டும், இளம் தாய்மார்கள் மனநிலை பாதிக்கவும் காரணமாகிறது, சிசுஹத்தி மிகப்பெரும் குற்றமாகும் ஏனெனில் அக்குழந்தைகள் ஒரு பாவமும் அறியாதவை அறிவீனத்தினால் செய்தபிழைக்கு கொலைக்குற்றமும் ஏற்கவேண்டும், வரும் முன் காப்போம் என்பது கோஷம் ஆகவேண்டும் இம்மாதிரியான கட்டத்தில் குடும்பத்தார் கைவிடுவதும் மானம் போவதை புதைத்து மறைத்து விட இயலும் என்று நினைக்கும் மதியீனம். பரிதாபம்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--