2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மல்லியப்பூ சந்தியில் விபத்து; இருவர் பலி; ஒருவர் காயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எஸ்.சணேசன்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி,  மல்லியப்பூ பகுதியில், இன்று (16) மாலை இடம்பெற்ற விபத்தில், இருவர்  பலியாகியுள்ளனர் என்றும் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து - கொட்டகலையை நோக்கிச் சென்ற ஓட்டோவும் தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றும், நேருக்கு நேர் மோதியதால், ஓட்டோவில் பயணித்த ஒருவர், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர், டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பஸ்ஸின் சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வேகத்தில், இந்த இரண்டு வாகனங்களும் பயணித்தமையே, இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலம், டிக்கோயா பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் இன்று (17), சட்ட வைத்திய அதிகாரியினூடாக, பிரதே பரிசோதனை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--