2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மீள்கட்டுமான பணிகளை துரிதமாக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் பணிப்பு

Super User   / 2010 மே 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் வழமையான நிலைக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும். அதற்காக குறித்த பகுதிகளுக்கான மீள்க்கட்டுமானப் பணிகளை இலங்கை அரசாங்கம் துரிதமாக்க வேண்டும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹருகிகோ குருடா தெரிவித்தார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்த அவர், இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக, இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இவ்வருடம் 150மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--