2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

‘மஹிந்த ஒத்துழைக்க வேண்டும்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி  

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்தழைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அவசியம் என, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். 

மேல் மாகாண முதலமைச்சின் காரியாலயத்தில் நேற்று இடம்​பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராகவே உள்ளார். கட்சியின் உறுப்பினர் என்ற ரீதியில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மஹிந்தவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ​மேலும், அவர் ஒத்துழைக்க வேண்டியது அவரின் கடமையாகும்.  

அவர், தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவாரா, வழங்கமாட்டாரா என்பது குறித்து யாரும் குழப்பமடைய தேவையில்லை.   “இந்த தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த அழைப்பை ஏற்று ஒத்துழைப்பு வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .