2020 நவம்பர் 25, புதன்கிழமை

முச்சக்கரவண்டி வேகத்தை 50 கிலோமீற்றராக அதிகரிக்க கோரிக்கை

George   / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், முச்சக்கரவண்டிகளில் பயணிகள் போக்குவரத்து தொடர்பில் விதிகள் மற்றும் வழிமுறைகள் உள்பட, தேசிய கொள்கையை உருவாக்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, இன்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இந்த தேசிய கொள்கை குறித்து முச்சக்கரவண்டி சங்கங்களுக்கு தெளிவுபடுத்தல் மற்றும் அவர்களது கருத்துகளை கேட்பதற்காக, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், விசேட கலந்துரையாடலொன்று இன்று அமைச்சில் நடைபெற்றது.

இதில், 9 பிரதான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்,  முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் யோசனைகளை முன்வைத்தனர்.

இதில், முச்சக்கரவண்டிகளின் மணித்தியாலத்துக்கான 40 கிலோமீற்றர் வேகத்தை 50 கிலோமீற்றராக அதிகரித்தல். அது தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க, இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .