2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'மாணவர்கள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்தவும்'

George   / 2016 ஜூலை 10 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரமான கல்வியை பெற்றுக்கொள்ள போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறை நடவடிக்கைகளை கையாள்வதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம், தற்போதைய அரசாங்கம் என்பன சுதந்திரமான கல்வியை இல்லாது செய்யும் வகையில் செயற்படுகின்றன.

இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் அதற்கு நாட்டு மக்கள் பின்னணியில் செயற்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, தற்போதைய அரசாங்கள் சுதந்திர கல்வியை இல்லாது செய்யும் வகையில் நடந்துகொண்டதுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் மீது அடக்குமுறையை கையாள்வதாகவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .