2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திப்பார்

Gavitha   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாரம் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பற்றித் தெளிவூட்டுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அனைத்து முதலமைச்சர் மற்றும் அனைத்து மாகாண சபைகளிலுமுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அந்தச் சட்டமூலத்துக்கான அனுமதியை, மாகாண சபைகள் வழங்கவேண்டும் என்பதற்காகவே, இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் பிரதமர் சந்திக்கவுள்ளதோடு, இந்தச் சட்டமூலம் விரைவில் மாகாண சபைகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்தச் சட்டமூலம் அமுல்படுத்தப்படுமானால், சுமார் 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை வழங்க முடியும் என்பதுடன், இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .