Gavitha / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை, அக்கட்சியின் தலைவராக நியமித்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான அருண பிரியசாந்த மற்றும் அசங்க ஸ்ரீநாத் ஆகியோரினால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், இவ்வாறானதொரு வழக்கைத் தாக்கல் செய்யவோ அல்லது அதனைக் கொண்டு நடத்தவோ, எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லை என்று, கட்சியின் பொதுச் செயலாளரினால், அவரது சட்டத்தரணிகள் ஊடாக, மன்றில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயத்தைக் கருத்திற்கொண்ட கொழும்பு மாவட்ட நீதவான் சனத் ஜே.மொரவக்க, இவ்வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .