2021 ஜனவரி 27, புதன்கிழமை

மீனவர்களை விடுவிக்குமாறு கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம்

George   / 2016 ஜூலை 11 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற  வேலை  நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 73  பேரையும், படகுகளையும்  விடுவிக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். 

இந்த வேலை நிறுத்தப்போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

இதனால் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .