Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஜூலை 17 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.
ஜெ எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 'இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நான்கு தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இயந்திர படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையில் தலையிட்டு அவர்களைக் கைது செய்வது மற்றும் அவர்களது மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் இந்த போக்கு அதிகரித்துக் காணப்படுகிறது.
கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தொடர்பாக நான் தொடந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில்; இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்படை, மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அவற்றை திருப்பித் தராமல் இருப்பது மீனவர்களை மிகவும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இலங்கை அரசின் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கை அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, இலங்கை சிறைகளில் வாடும் 77 மீனவர்கள் மற்றும் சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர்களது 102 படகுகளையும் விடுவிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்' என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago