2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மின்சாரத்தை 10% குறைந்தால் விசேட தள்ளுபடி

Thipaan   / 2016 மார்ச் 27 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணத்தை, முதல் மாதக் கட்டணத்தை விடவும் அடுத்த மாதம் 10 சதவீதம் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விசேட தள்ளுபடியை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை, இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்குச் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன என்று தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அச்சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்ற தனியார் நிறுவனம் உள்ளிட்ட பிரிவினருக்கு, ஊக்கத்தொகையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, 225 மெகாவொட் மின்சாரத்தை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கொள்வனவு செய்வதற்கும் இலங்கை மின்சார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X