2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி ஜேர்மன் குழந்தை பலி

George   / 2016 ஜூலை 14 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 வருடம் 10 மாதங்களான குழந்தையே உயிரிழந்துள்ளது.

பெற்றோர், இரவு உணவு உட்கொண்ட போது, குழந்தை நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நிலத்தில் கிடந்த, மின்சாரத்தை கடத்தும் பாதுகாப்பற்ற வயரை குழந்தை தொட்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் அதனையடுத்து, வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .