2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் தூதுவருக்கு ரெட்நோட்டீஸ்?

Kanagaraj   / 2016 ஜூலை 15 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரத்துங்கவை கைதுசெய்வதற்காக, ரெட்நோட்டீஸ் விநியோகிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

சர்வதேச பொலிஸாரின் ஊடாகவே இந்தப் ரெட்நோட்டீஸை அனுப்பிவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், இலங்கை விமானப்படைக்கு மிக்விமானங்களை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும், சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையை அடுத்தே, நிதிமோசடி விசாரணைப்பிரிவு மேற்கண்டவாறு கோரியுள்ளது.

இந்தகோரிக்கையை, ஆராய்ந்துபார்த்து எதிர்வரும் 18ஆம் திகதியன்று கட்டளைப்பிறப்பிப்பதாக நீதவான் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .