2021 மே 10, திங்கட்கிழமை

முரளி ஒரு சிறந்த குடிமகன்: சங்கா

Princiya Dixci   / 2016 ஜூலை 26 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஒரு சிறந்த இலங்கைக் குடிமகன் எனவும் அவர் தனது நாட்டை விரும்பும் ஒருவராகவும் பயிற்றுவிப்பாளராகவும் திகழ்கிறார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பாக தனது டுவிட்டரில் தளத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சுழல் பந்து ஜம்பவானாகிய முரளிதரனுக்கு தன்னை நியாயப்படுத்த வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் தனது டுவிட்டர் தளத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X