2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மூவர் மீது கத்தி வெட்டு

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கத்தி வெட்டுக்கிலக்கான சம்பவமொன்று இன்று சனிக்கிழமை, மீட்டியாடிகொடைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   அத்தரவத்த, களுபே, ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில், 45 மற்றும் 28 வயதுடைய ஆண்கள் இருவரும் 35 வயது பெண்ணும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் கராப்பிட்டய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்.

இதில் ஒருவர் வெட்டுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் வெட்டுகாயங்களுக்குள்ளானவர்களின் உறவினர்கள் எனவும் அவர்களில் ஒருவர்  இராணுவத்தில் தொழில் புரிபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .