2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தால் பெற்றோர், பாதுகாவலரை இழந்த 731 சிறார்கள் வவுனியா சிறுவர் இல்லங்களில் பராமரிப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 09 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்திலுள்ள 5 சிறுவர் இல்லங்களில் 731 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களென மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அலுவலர் ராசா கோகிலதாஸ் தெரிவித்தார்.

இவர்கள் இறுதிக்கட்ட யுத்த காலத்தில் பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் தவறவிட்டவர்களெனத் தெரிவித்த அவர், கடந்த ஒரு வருடத்தில் பெற்றோர்களை தவறவிட்ட 411 சிறுவர் மீண்டும் பெற்றோர்களுடன் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பின் உரித்தானவர்களென அடையாளம் காணப்பட்ட உறவினர்களிடம் 258 சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--