2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யானையின் தாக்குதலுக்குள்ளாகி சைக்கிளோட்டி பலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 07 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தல, கதிர்காமம் பகுதியில் நபர் ஒருவர் யானையின்  தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை குறித்த நபர் தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே, யானையின் தாக்குதலுக்குள்ளாகி  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது.

சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதேவேளை, இதனைப் போன்றதொரு மனித - யானை மோதல் சம்பவமொன்றும் அண்மையில் குறித்த பகுதியில்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--