2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

யாழில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 19 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த காணாமல் போன மூன்று சிறுவர்களும் இன்று (19) காலை கண்டுபிடிக்கப்பட்டனர். 

அங்குள்ள ஆலய மடமொன்றில் படுத்திருந்தபோது, தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்களால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பத்து வயதைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் நேற்று (18) மாலை முதல் இவ்வாறு இருந்து காணாமல் போயிருந்ததாக, பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த சிறுவர்கள் மாலை வரை வீட்டுக்கு வராத நிலையில், ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .