2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சாவகச்சேரி வர்த்தகரின் மகன் கொலைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

Super User   / 2010 மார்ச் 28 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த வர்த்தகரின் மகன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த மாணவனின் குரூரக் கொலையானது மக்கள் மத்தியில் அச்ச உணர்வைத் தூண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் கொலை, கடத்தல், கப்பம் வசூலித்தல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .