2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை வவுனியா வளாகத்தின் மூடப்பட்ட பகுதி மீண்டும் திறந்து வைப்பு

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் மற்றும் நெலுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் மூடப்பட்டிருந்த பகுதிகள் இன்று முதல் மீண்டும் செயற்பட ஆரம்பித்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

பம்பைமடு வளாக விடுதி மற்றும் நெலுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் மூடப்பட்டிருந்த ஒரு பகுதிகள் புனர்வாழ்வு நிலையங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருந்தன.

புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் மற்றும் நெலுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் பகுதிகள் மாணவர்கள் பாவனைக்காக மீண்டும் விடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--