2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலை வவுனியா வளாக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

Super User   / 2010 மே 04 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் வர்த்தகபீட மாணவர்களுடைய அனைத்துப் பிரச்சினைகளும் அடுத்த சில தினங்களில் தீர்த்துவைக்கப்படும் என வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் என்.நந்தகுமார் தெரிவித்தார்.

சுமார் 150 மாணவர்கள் வவுனியா உள்வட்ட  வீதியிலுள்ள  வளாக விரிவுரை மண்டபத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவப் பிரதிநிதிகளுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.

இதன்போது, மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆறு கோரிக்கைகளையும் தீர்த்துவைக்க நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X