2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இமெல்டா சுகுமார் நியமனம்

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்டத்திற்கான புதிய  அரசாங்க அதிபராக முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் யாழ் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த கே.கணேஸ் ஓய்வு பெறுவதையடுத்து, யாழ் மாவட்டத்தின்  அரசாங்க அதிபராக  இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதேவேளை,முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய  அரசாங்க அதிபராக முன்னர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் நாளை முதலாம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண்  அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--