2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ராஜித தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு

Editorial   / 2020 ஜனவரி 17 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியமைக்கு ஆட்சேபனை தெரிவித்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, இன்றைய தினம் மன்றில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கடந்த மாதம் 27 ஆம் திகதி, நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து ராஜித சேனாரட்ன னைதுசெய்யப்பட்டார்.

அதனையடுத்து, கடந்த 30 ஆம் திகதி, கொழும்பு பிரதான நீதவான் அவருக்கு பிணை வழங்கியதுடன், கடந்த செவ்வாய்க்கிழமை, மருத்துவமனையிலிருந்து ராஜித வெளியேறினார்.

அதனையடுத்து, அன்றைய தினமே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--