2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ராஜபக்ஸ விஜயம்; தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம்; நூறுக்கணக்கானோர் கைது

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVE இந்தியாவுக்கான விஜயமொன்றினை இன்று மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ஜனாதிபதியின் உருவ பொம்மைகள் எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டு கரு‌ப்பு‌க் கொடி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை வகித்த சீமான், வைகோ, பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு, டி.ராஜேந்தர், மகேந்திரன், தொல்.திருமாவளவன் உட்பட நூற்றுக்கணக்கானோரை தமிழ்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர் என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

தமிழகத்தின் திரு‌ப்பூ‌ர், ம‌யிலாடுதுறை,சிவக‌ங்கை,‌கோவை, கா‌ந்‌‌திநக‌ர், நாக‌ர்கோ‌வி‌ல், கரூர், செ‌ன்னை‌,ஓசூ‌ர், தே‌னி‌, நாம‌க்க‌ல் போன்ற ‌பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக செய்திகள் மேலும் தெரிவித்தன.

  Comments - 0

  • xlntgson Tuesday, 08 June 2010 09:56 PM

    இவ்வாறான அரசியல் 'ஸ்டன்ட்'களுக்கு இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் இயக்கங்கள் பெயர் போனவை. நெருப்புக் குளியலும் ஒன்று. ஆனால் இதனால் என்ன நன்மை கிடைத்தது, பழைய குப்பையைக் கிளறிக் கொண்டிருப்பதனாலோ பழிவாங்கும் உணர்ச்சியை இளைஞர்கள் மத்தியில் தூண்டி விடுவதனாலோ? இவர்கள் தலைமை சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள், இதெல்லாம் நாங்கள் பார்த்தது தானே, ஒன்றும் புதுமை இல்லை, இதில்! அரசுகளைக் குறை கூறி அரச மாற்றங்கள் வருவதாக கூறிக்கொண்டே இவர்களும் கிழவர்கள் ஆகி விட்டனர். ஒரு தீர்வும் வர விட மாட்டார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--