2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்கள் திறப்பு

Editorial   / 2019 நவம்பர் 09 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனையியல் மற்றும் விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதி வசதிகளைக் கொண்ட மாணவர்கள் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் மாலை 4 மணி அளவில் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் நோயின் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .