2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ரயிலுடன் மோதி 3 யானைகள் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரனை மற்றும் பளுகஸ்வெவ ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் பாதையில் ரயிலுடன் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளதால்,மட்டக்களப்பு  ரயில் மார்க்கத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த யானைகள் ரயிலில் மோதியதையடுத்து, ரயில் தடம்புரண்டுள்ளதால், இதனை சீர் செய்யும் நடவடிக்கையில் ரயில்வே திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு வரை எரிபொருள் கொண்டுச் சென்ற ரயிலிலேயே இன்று அதிகா​லை யானைகள் மோதி உயிரிழந்துள்ளதுடன், இதில் ஒரு யானை கர்ப்பமாக இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .