2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ரயில் முன்னால் பாய்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜனவரி 13 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ். பருத்தித்துறை பகுதியில் கடை எரிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், தனக்கு தானே தீ மூட்டியவாறு ரயில் முன்பாக பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

பருத்தித்துறை பன்னங்கட்டி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை சந்தை கட்டட தொகுதியில் பான்சி கடையுடன் இணைந்த புடவை கடை ஒன்று நேற்று (12) அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டது. 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார் , அருகில் இருந்த கடையின் CCTV கமரா பதிவுகளை சோதனை செய்தனர்.

இதன்போது, எரிக்கபட்ட கடைக்கு அருகில் உள்ள மற்றொரு கடை உரிமையாளரே கடைக்கு தீ மூட்டி சென்றமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, சந்தேக நபரை கைது செய்யும் நோக்குடன் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் தலைமறைவாகி இருந்தார். 

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்திய நிலையில், சந்தேக நபர் இன்று (13) காலை. 6.30 மணியளவில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .