2021 மார்ச் 08, திங்கட்கிழமை

’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 21 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

" வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன்  ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்" என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) நடைபெற்றது. இதன் போதே   அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பணத்தை மாகாண சபை பெற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும், இதுவரை அந்த பணத்தில் ஒரு சதம் கூடச் செலவு செய்யப்படாது வடமாகாண பிரதம செயலாளரின் கணக்கில், வங்கியில் வைப்பிலிடப்பட்டு இருக்கிறது.

தற்போது மகளிர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரன் பொறுப்பேற்று உள்ளார். அவராவது இந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்" என அவைத்தலைவர் கோரினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .