2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ரூ.1,700 கோடி செலவில் அம்பாறையில் சேதனப்பசளை தயாரிப்பு நிலையம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 07 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் 1,700 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், அம்பாறை மாவட்டத்தில் சேதனப்பசளை தயாரிப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்திலிருந்து நாளொன்றிற்கு 12 தொன் சேதனப்பசளையை உற்பத்தி செய்ய முடியுமென மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சாவேஸ் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .