2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

லிப்டன் சுற்றுவட்டத்தில் மீண்டும் சத்தியாக்கிரகப் போராட்டம்

Editorial   / 2017 ஜூலை 24 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவபீட மாணவர் செயற்பாட்டுக்குழு ஆகியவற்றின் மாணவர்கள், கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில், மீண்டும் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை, இன்று (24) ஆரம்பித்தனர்.

மாலபேயில் அமைந்துள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தி மாணவர்கள் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

ஏற்கெனவே, நேற்று (23), குறித்த பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது, பொலிஸார், நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .