2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

லலித் வீரதுங்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

லலித் வீரதுங்கவால் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுவினை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் ருவன் பெர்ணான்டோ ஆகியோர், இந்த உத்தரவை இன்று (22) பிறப்பித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள விகாரைகளுக்கு சில் துணிகளை பகிர்ந்தளித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 600 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 50 மில்லியன் ரூபாய் அபராம், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற தீர்ப்பு சட்டவிரோதமானது என தெரிவித்து,  வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யுமாறு, லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .