2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வாக்காளர் பதிவு பத்திரம் கையளிப்புக்கு சாட்சி; வீட்டு உரிமையாளருக்கு பற்றுச்சீட்டு

Super User   / 2010 மே 26 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பதிவுப் பத்திரத்தை கிராம சேவகர்களிடம் கையளித்தமைக்கு சான்றாக வீட்டு உரிமையாளர்களால் பேணப்படக் கூடிய வகையில் பற்றுச்சீட்டொன்று வெளியிடப்படவுள்ளது.
 
இந்த பற்றுச்சீட்டானது வாக்காளர் பதிவுப் பத்திரத்திலேயே பொறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த வாக்காளர் பதிவுப் பத்திரம் கிராம சேவகரிடம் கையளிக்கப்படும் போது அதனை வேறுபடுத்தி பொதுமக்கள் வைத்திருக்க முடியும் என்று பிரதி தேர்தல் ஆணையாளர்  டபிள்யு.பி.சுமனசிறி தெரிவித்தார். 
 
எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளன. இந்நிலையில் வெளியிடப்படவுள்ள வாக்காளர் பதிவுப் பத்திரங்களுடனேயே இந்த பற்றுச்சீட்டுக்களும் வெளியாகவுள்ளன. 
 
வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ள  இம்முறைக்கான வாக்காளர் பதிவுப் பத்திரங்களில் 18வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களது பெயர்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அவர் வெண்டுகோள் விடுத்தார். 
 
கடந்த பொதுத் தேர்தல், ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது சுமார் இரண்டு மில்லியஒ பொதுமக்களுக்கௌ வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை என்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மேலும் கூறினார். 
 
  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--