2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

’வடக்கில் இந்தியர்களின் குடியேற்றம் இல்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் இந்தியர்கள் குடியேற்றப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச  தெரிவித்திருக்கும் கருத்தை அரசாங்கம் முழுமையாக மறுத்துள்ளதோடு, அது பொய்யான தகவல் எனவும் தெரிவித்துள்ளது.

வடக்கில் இந்தியர்கள் கு​டியேற்றப்படவில்லை எனவும், யுத்தத்தினால் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்து தற்போது நாடு திரும்பும் இலங்கையர்களே குடியேற்றப்படுகிறார்கள் எனவும் விளக்கமளித்துள்ளது.

ஆகவே விமல் எம்.பி இவ்வாறான பொய்யான தகவல்களை தெரிவிப்பதற்கு முன்னர் அரசாங்கத்திடம் கேட்டால் இது தொடர்பான புள்ளிவிபரங்களை தந்து உதவ முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த சரமசிங்க தெரிவித்துள்ளார்.

டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .