Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, பணியிடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பணியில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு இலங்கை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து ஏனைய அதிகளவான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியில் ஈடுபட முடியும் என, அந்த சங்கம் அறிக்கை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள இயலுமாக உள்ள சேவைகளை பயன்படுத்துவது சிறந்தது எனவும், அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதிகளவில் மக்கள் நடமாடும் வங்கி மற்றும் கட்டணங்களை செலுத்தும் நடவடிக்கைகளுக்கு பொதுவெளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறே இணையத்தை பயன்படுத்துவது சாலச்சிறந்தது என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago