2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வன்னியில் மீள்குடியேற்ற பகுதிகளில் 18 புதிய தபால் நிலையங்கள்

Super User   / 2010 மே 06 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னியில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற அனைத்துப் பகுதிகளிலும் தபால் நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன என்று வடபிராந்திய பிரதி அஞ்சல்மா அதிபர் வி.குமரகுரு தெரிவித்தார்.

இதுவரையில் 18 பிரதேசங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியிலேயே இறுதியாக தபாலகமொன்று திறக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஏ-9 வீதிக்கு மேற்கே மாங்குளம், நாட்டாங்கண்டல், வவுனிக்குளம், ஜோகபுரம், துணுக்காய், பூநகரி, நல்லூர், விநாயகபுரம், சிவபுரம், வேரவில்லை, புத்துவெட்டுவான், உருத்திரபுரம், பரந்தன், கிளிநொச்சி, பளை, இயக்கச்சி, ஏ-9 வீதிக்கு கிழக்கே ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு ஆகிய இடங்களிலேயே இந்த தபாலகங்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--