Freelancer / 2026 ஜனவரி 14 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணிகளை உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (13) கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சீருடைத் துணிகளைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 4,418,404 மாணவர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைத் துணிகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெற்றுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 19 முதல் நாடு முழுவதும் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கு இந்த சீருடைத் துணிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago