2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வான் விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்களுக்கு பலத்த காயம்

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை  - அக்குறெஸ்ஸ பகுதியில், வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்கு ஆளான மாணவர்கள் மூவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியின் பிரதான பாடசாலை ஒன்றில் நடைபெற்ற “பிக் மெச்” போட்டியின் நிறைவில் ஊர்வலம் சென்றபோதே குறித்த வான் விபத்துக்கு உள்ளாகியுள்ளதென கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் விபத்தில் மிகக் கடுமையாக பாதிப்பு ஆளானா மாணவனுக்கு, மாத்தறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.

குறித்த மாணவர்கள் அடுத்த வருடம் கா.பொ.த உயர்த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .